Category: உள்நாடு
ஊழல், மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற தலைவரே சஜித் பிரேமதாச – தௌபீக் எம்.பி
எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்து கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர் போட்டியிடும் ஓர் தேர்தலாக இது காணப்படுவதுடன் வழமைக்கு மாறாக பலத்த போட்டியும் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற ஓர் தலைவராக சஜித் பிரேமதாச மாத்திரமே காணப்படுகிறார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்…
SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் காத்தான்குடி முபீன் குழு ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு எல் எம் என் முபின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு தீர்மானம் இன்று 21/08/2024 அன்று அன்று கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்த பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபின் தலைமையிலான குழுவினர் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும்…
ஐ.ம. கூட்டணியுடன் இணைந்ததால் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசாங்கத்தால் நிறுத்தம் – சஜித்
தேர்தல் காலங்களில் அரச நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமான குற்றமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கொண்டமையால் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்
தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அபிவிருத்தி திட்ட அமைச்சராக அலிஸாஹிர் மெளலானா நியமனம்.
அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அண்மையில் ரணில் தரப்புடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது
அனுர – உலமா சபை சந்திப்பு!
இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய…
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல் கலாசாரத்தின் விளைவுகளால் நாடு சூழப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு நாட்டை தேசியத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒரே குழுக்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை உருவாக்கி மக்களிடம் வந்தாலும்…
தலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவிதாரன.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதன்படி, தலதா அத்துகோரலவின் இராஜிநாமாவுடன், மேற்படி சபை உறுப்பினர் பதவி, இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்படவுள்ளது. கருணாரத்ன பரணவிதான தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வேன் – டில்ஷான்.
நான் இரட்டை குடியுரிமை பெற்றவன். எனக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்யவும் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…
மொட்டுவின் எம்.பி எதிர்க்கட்சியில் இணைவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். 2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கருணாதாச மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.