திலித் ஜயவீர வேட்புமனுவில் கையெழுத்திட்டார்

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான  திலித் ஜயவீரவுக்கான கட்டுப்பபணம் நேற்று (13) செலுத்தப்பட்டது….

Read More

திலகரத்ன டில்ஷானும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.

Read More

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதி அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு…

Read More

கட்டுப்பணம் செலுத்திய நாமல்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

Read More

நச்சுப் புகையை சுவாசித்த இருவர் உயிரிழப்பு.

மாலபே, கஹந்தோட்டையில் உள்ள வீடொன்றில் இரசாயன கலவையை தயார் செய்ய முயன்ற இருவர் நச்சுப் புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 மற்றும் 65 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பிரதான நான்கு வேட்பாளர்களின் நூறு தேர்தல் பிரசார கூட்டங்கள்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாடெங்கினும் 100 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை குருணாகலில் இருந்தும், சுயேச்சை வேட்பாளராக…

Read More

கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை சேவையாற்றுவேன் – சஜித்

உடம்பில் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை மக்களுக்கு இரவு பகல் பாராது சேவையாற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொது மக்கள் வெற்றிபெறும் யுகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி முதல் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹியங்கணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

முன்னாள் அமைச்சர் ஜயதிஸ்ஸ ரணவீரவும் ரணிலுக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க முன்னாள் அமைச்சர் ஜயதிஸ்ஸ ரணவீர தீர்மானித்துள்ளார். இன்று (13) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு.

இன்று (13) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு அரசியல் கட்சியும் 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் நாளை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் கூறியுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பேர்…

Read More