Category: உள்நாடு
அரச சொத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டாம்.
அரச சொத்துக்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என ஆராய்ந்து அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தனியான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அரச சொத்துக்களை தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த…
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சினையல்ல
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு 100 கோடி ரூபாயை தாண்டவில்லை எனவும் 10 பில்லியன் தான் வரம்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக 10…
ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தல் களத்தில்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் மேயர் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.
குருநாகல் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். துஷார சஞ்சீவ 2ஆம் புவனேகபாகு மன்னனின் அரச சபையை உடைத்தமை தொடர்பில் மூன்று வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இடதுசாரி முன்னணி சஜித்திற்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி , ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் சஜித்திற்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் M.P.லோகநாதன், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீஸ்வரன், லுணுகலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி ஆகியோர் தெரிவித்தனர். இன்றைய தினம் (11) பசறை நூலக கேட்போர் கூடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சையின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின்…
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து – கப்பல் சேதம்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்கு கப்பலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ பரவல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயை அணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இத்தீயை அணைக்காமல் இருந்திருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பிடப்படவில்லை எனவும், தீ விபத்தினால் பொருட்கள் மற்றும் கப்பலுக்கு அதிக சேதம்…
எதிர்க்கட்சிகளின் பேச்சை நம்பி மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்தாதீர்கள்
‘எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் சற்றும் சிந்திக்காமல் பேசி வருகின்றன. அவ்வாறு நடந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பாருங்கள்? இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வரிசை யுகமே மீண்டும் உருவாகும். ஆகவே இந்த நிபந்தனைகளை சரியாக முன்னெடுத்து வந்தது யார் என்பதை அறிந்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மஸ்கெலியா தொகுதி வர்த்தகர்களுடனான சந்திப்பு சனிக்கிழமை…
ஜனாதிபதியும், மனுஷ நாணயக்காரவும் பொய்யர்கள் பந்தை என் பக்கம் வீசுகின்றனர்
மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டம் நேற்று (10) ஹட்டனில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது . இந்தத்…
ஜனாதிபதி ரணிலை சந்திக்கிறார் சுமந்திரன் எம்.பி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் புதன்கிழமையன்று (14) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (10) இந்தச் சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு குறித்த தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதிக்கு…