Category: சூடான செய்திகள் 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம் பி க்கள் – ரணிலுக்கு ஆதரவு.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். பம்பலபிட்டியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது…
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்தார் வேலு குமார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலுக்குமார் தனது முடிவை இன்று வியாழக்கிழமை (15) அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்காக…
சஜித்துக்கு ஆதரவு வழங்க மக்கள் காங்கிரஸ் தீர்மானம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்குவதாக சற்றுமுன் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடகூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் இன்று மாலை(14) முதல் இடம்பெற்ற நீண்ட நேரம் நடைபெற்ற உயர்பீடக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த பின்னரே மேற்கண்டவாறு அறிவிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி உயர்பீட கூட்டத்தின் பின் , நாடாளாவிய ரீதியில் மாவட்ட செயற்குழுவை சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களின்…
வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது
கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான தொழிற்சங்கத்தின் குழுவினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது ? புத்தளத்தில் ரிஷாட் MP
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக புத்தளம் மக்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு புத்தளம் தில்லையாடியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது. இதன்போது, பொதுமக்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். கட்சியின் உயர்பிட உறுப்பினர் மதின் சேர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள்…
சுமந்திரனை சந்தித்த நாமல் ராஜபக்ஷ
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவும் இன்று(10) முற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமந்திரனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இணைந்துகொண்டிருந்தார். தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ…
ஶ்ரீலங்கா மக்கள் கட்சி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்.
ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் ஹரின் பெர்னாண்டோ
சுற்றுலாத்துறை, விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அவரை விலக்கியது சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.