‘சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை’ – பிரதமர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக்கிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“(மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவின்) படுகொலை பாராளுமன்றத்திற்கு ஒரு அடியாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கப்பட வேண்டும்” என வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரங்கல் விவாதத்தின் போது பிரதமர் தெரிவித்தார்.

நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *