இலங்கை அணிக்காக களத்தில் போராடும் சந்திமல்!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரணடாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெறுகின்றது. கொழும்பு பி சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய சற்று முன்னர் வரை 7 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள்ளது. 64 ஓட்டங்களுடன் சந்திமல் துடுப்பெடுத்தாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை ரூபாய் 11 பில்லியன்கள் இலாபமிட்டியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வருடாந்த முன்னேற்ற அறிக்கையினை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 83 வீத வளர்ச்சியாகும் என்றும் பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியிலேயே இவ்வெற்றியை…

Read More

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப கட்ட வலய மட்டப் போட்டிகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளன. கல்வியமைச்சினால் நடத்தப்படும் இந்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி ஆரம்பமாகும். 23 போட்டிகளுக்காக தேசிய மட்டத்தில் போட்டி இடம்பெறும். அனைத்து போட்டிகளையும் 13 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கல்வியமைச்சின் விளையாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

Read More

அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் சதுர்தா வருஷ பூர்த்தி விழா

(UDHAYAM, COLOMBO) – கொட்டகலை அகில இலங்கை இந்து குருமார் சங்கம் ஒழுங்கு செய்துள்ள சதுர்தா வருஷ பூர்த்தி விழா நடைபெற்றது. அகில இலங்கை இந்து குருமார் சங்கத்த்தின் செயலாளர் சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலய கலாசார மண்டத்தில் நேற்று காலை இடம்பெற்றது. இந்த சதுர்மத வருஷ பூர்த்தி விழாவில் விநாயகர் வழிபாடு, குரு வந்தனம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா வேத பாடசாலை மாணவர்களின் காயத்திரி ஜெயம், அறநெறி பாடசாலை மாணவர்களின்,…

Read More

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஜுன் மாதம் 30ம் திகதி வரையில் தொடரும் பட்சத்தில், 51 பில்லியன் ரூபாய் மேலதிக செலவினை மின்சார சபை தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்

(UDHAYAM, COLOMBO) – ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீர வீராங்கனைகளை கொண்ட சங்கமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையாக சிரேஷ்ட இலங்கை ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் நேற்று சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை சந்தித்தனர். 1948ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 75 வீர வீராங்கனைகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மற்றும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ள வீர வீராங்கனைகளின் சேமநலனை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கே இந்த…

Read More

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா பிரதமர் அணிக்கும் மற்றும் சுற்றுலா இலங்கை அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது . எடம் வொஜஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்….

Read More