அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரிய விவாதம் வௌ்ளிக்கிழமை

(UDHAYAM, COLOMBO) – நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியுள்ள விவாதத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடாத்த சபாநாயகர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார்.

Read More

வாழைப்பழ பொதி தொடர்பில் அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக வாழைப்பழங்களை பொதியிட்டு அதில் தனது புகைப்படம் மற்றும் பெயரினை உள்ளிட்டு விநியோகித்துள்ளதாக பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அந்த பொதியில் “காலியின் முதன்மையானவருடன் முன்னோக்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அமைச்சரின் தொலைப்பேசி இலக்கம் மற்றும் காலி -தல்கஸ்வல பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் தொலைப்பேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் , குறித்த…

Read More

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  கெராட் ரான் லேனட் (GERHARD RAN”T LAND)  தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

Read More

நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சட்டம் ஒழுங்குகள் அமைச்சருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More

சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவ பிரதேசத்தை சேர்ந்த நிலுபமா சங்ஜிவனி என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் வரை தொலைப்பேசியினூடாக கதைத்து வந்தார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , கடந்த ஏப்ரல் 25ம் திகதி நிலுபமா சவுதியில் மருத்துவமனையொன்றில் உயிரிழந்து விட்டதாக அவர்களது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து…

Read More

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!

(UDHAYAM, COLOMBO) – நேற்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பூனே சுப்பர் ஜியன்ட் அணியை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் சுவீகரித்துக்கொண்டது. இந்நிலையில் , நேற்றைய போட்டி தொடர்பில் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார். அற்புதமான போட்டி. முதல் பாதி எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இடைவேளையின் போது கலந்துரையாடினோம். எம்மால் இந்த போட்டியை வெற்றி கொள்ள முடியும் என நம்பினோம்.கடந்த சில…

Read More

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் (Manchester )நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது நேற்று நள்ளிரவு இரவு 10.30 (லண்டன் நேரம் ) மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை பார்வையிட்ட மக்கள் சிதறி ஓடினர். இக்குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலியானோர்…

Read More

தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தனியார் மருத்துவ கல்விதுறை மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி என்பனவற்றின் நடைமுறைகள் குறித்து முறையான நெறிப்படுத்தல்கள் ஏற்படுத்தப்படும் வரையில் மாணவர்களை இணைத்து கொள்வதை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார். இது தொடர்பான அறிவித்தல் மாலேபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

Read More

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமரின் வருகை நாட்டிற்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையினை  3 நாட்களுக்குள் கோரியுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பிரபல போதை கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அரச…

Read More