தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கத்தவறியவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு  தெரிவித்துள்ளதாவது: சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் என்பனவற்றைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட நடவடிக்கைகளின்…

Read More

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுகிறது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – தமிழ் முற்போக்கு கூட்டணியை கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (28.02.2017) ராஜகிரியவில்  அமைந்துள்ள தலைமை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித்தலைவர் பழனி திகாம்பரம், நிதிச் செயலாளர் எம்.திலகராஜா, செயலாளர் லோரன்ஸ், மற்றும் கூட்டணியின் பிரதிப்பொதுச்செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு…

Read More

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் மற்றும் திறந்த சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

பிரபல நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில்!

(UDHAYAM, CHENNAI) – இந்திய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது….

Read More

பாவனா துணிந்து செய்த செயல்!!

(UDHAYAM, INDIA) – பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், கடும் மன வேதனைக்கு ஆளான நடிகை பாவனா, மன தைரியத்தால் அதிலிருந்து மீண்டு, படப்பிடிப்புக்கு திரும்பினார். நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், அவரது காரை ஓட்டி வந்த மார்ட்டின், பாவனாவிடம் முன்பு ஒட்டுநராக வேலைபார்த்த பெரும்பாவூர் சுனில்குமார், வடிவால் சலீம், கண்ணூர் பிரதீப், மணிகண்டன், விஜேஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாவனாவுக்கு ஆதரவாக மலையாள திரையுலகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தேசிய…

Read More

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

(UDHAYAM, INDIA) – காதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால் நடிகை ஒருவர் கதறி அழுததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெரிய நட்சத்திரத்தின் பெயரை கொண்ட இயக்குனர், நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு தன்னுடைய படங்களில் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், திருமணத்திற்கு பிறகு அந்த நடிகையை நடிக்கக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், நடிகையோ தான் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் இருவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இரண்டு…

Read More

எகிப்து பிரஜையொருவர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

அணி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கன ஹேரத்!!

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள முடியும் என்று, இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் ஆரம்பமாகும் தொடருக்கான இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை குழாமில் Dinesh Chandimal (wk), Dimuth Karunaratne, Niroshan Dickwella, Upul Tharanga, Dhananjaya de Silva, Kusal Mendis, Asela Gunaratne, Suranga Lakmal, Lahiru Kumara,…

Read More

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள்

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் வழக்கு தொடர்பில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More