சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மாத்தறையில்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் இம்மாதம் 8 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவிததார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார இந்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர்…

Read More

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன.னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக  அமைந்திருப்பதாக  பெற்றோர் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த…

Read More

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திhபால சிரிசேன தெரிவித்தார். கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதுடன், 2017ஆம் ஆண்டினை வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டாக…

Read More

இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அசங்க குருசிங்க 1996 ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை

(UDHAYAM, WASHINGTON) – அமெரிக்காவின் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான தமது முன்வரைவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார். இதன்படி பாதுகாப்பு ஒதுக்கங்கள் 54 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் வழமையான ஒதுக்கத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமானதாகும். எவ்வாறாயினும் அவர் வெளிநாட்டு உதவிகளுக்கான ஒதுக்கங்கள் மற்றும் சுற்றாடல் துறை ஒதுக்கங்கள் என்வற்றை கனிசமாக குறைத்துள்ளார். குறிப்பாக சூழல்மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்த நம்பிக்கையற்றவராக டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார். இது…

Read More

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

(UDHAYAM, COLOMBO) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. அண்மைக்காலமாக அவரது பெயர் செய்திகளில் அடிக்கடி அடிபட்டது. அதற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரமாகும். இந்நிலையில் அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஆழ்வார்ப்பேட்டை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மணிக்குக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக செளந்தர்யாவிடம் இதர ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்ததாக அறியப்படுகிறது. உடனே முக்கியஸ்தர் ஒருவர் நேரில் வந்து சமரசம்…

Read More

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

(UDHAYAM, COLOMBO) – பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார். இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே. ஸ்ரீபவன் இன்று ஓய்வுபெறுகிறார். இதேவேளை புதிய பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை அதன்  தலைவரான சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றிரிவு கூடியது. இதன் போது புதிய நீதியரசர் நியமனத்திற்கு  நீதியரசர் பிரியசாத் டெப்பை சிபார்சு…

Read More

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

  (UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தமது நூறாவது டெஸ்ட் போட்டியினை எதிர்வரும் 15ஆம் திகதி விளையாடவுள்ளனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சர்வதேச அணிகளில் இறுதியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணியாக கொழும்பு போட்டியின் பின்னர் பங்களாதேஷ் அணி திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணி அந்தஸ்தை பெற்ற பங்களாதேஷ் அணி தமது முதலாவது டெஸ்ட் போட்டியினை கடந்த இரண்டாயிரமாம்…

Read More

‘போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு எனது நாட்டின் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்’ – சீசெல்ஸ் ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் போதைப்பொருள் செயற்திட்டத்துக்கு தனது நாட்டின் உயந்த பட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே (Danny Faure) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உறுதியளித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி ஃபவ்ரே உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு சீசெல்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார். சீசெல்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சினேகபூர்வமாக வரவேற்கப்பட்டனர். நட்புறவு கலந்துரையாடலின்…

Read More

Update – சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்:சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று ஹொரணை – மொரகஹாஹேன பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ————————————————————————————————————– (UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவதற்காக பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

Read More