ஆப்கானிஸ்தான் , சிம்பாப்வே ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீடு!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

Read More

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  (UDHAYAM, COLOMBO) – இன்று காலை களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு சிறை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் நகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறை அதிகாரி மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5…

Read More

இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ – இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ என்ற கோசத்துடன், இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான சிறினிவாஸ் குசிபோட்லா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் அடம் புரின்டோன் என்ற 51 வயதான முன்னாள் கடற்படை அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!! திடீர் மரண சம்பவம்.. ; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

(UDHAYAM, KOLLYWOOD) – நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரியின் தாயார் திடீர் மரணம் அடைந்துள்ளார். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ‘நெடுஞ்சாலை’ ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி. இவரது சொந்த ஊர் பழனி ஆகும். சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் வந்து குடியேறி படங்களில் நடித்து வருகிறார். இவரது பெற்றோர் பழனியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆரியின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச்…

Read More

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஜுன் மாதம் 30ம் திகதி வரையில் தொடரும் பட்சத்தில், 51 பில்லியன் ரூபாய் மேலதிக செலவினை மின்சார சபை தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்

(UDHAYAM, COLOMBO) – ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீர வீராங்கனைகளை கொண்ட சங்கமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையாக சிரேஷ்ட இலங்கை ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் நேற்று சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை சந்தித்தனர். 1948ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 75 வீர வீராங்கனைகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மற்றும் எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ள வீர வீராங்கனைகளின் சேமநலனை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கே இந்த…

Read More

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – இன்று மஹா சிவராத்திரி தினமாகும். மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட…

Read More

இந்தோனேஷியா இலங்கைக்கு உதவி!

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் எ.எம்.பஷீர் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஐனாதிபதி காரியாலயத்தில இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை…

Read More

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மனித வளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தேசிய பாலுற்பத்தி தொழில்துறை குறித்து அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தோரின் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டின் பொருளாதாரத்தை…

Read More

நாட்டின் மனித வளத்தில் விவசாயத்துறையில் 30 சதவீதத்தினர் -வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மனித வளத்தில் 30 சதவீதத்தினர் விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன்மூலம் மொத்த உற்பத்திக்கு 9 சதவீத பங்களிப்பு இடம்பெறுகிறது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தேசிய பாலுற்பத்தி தொழில்துறை குறித்து அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தோரின் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நாட்டின் பொருளாதாரத்தை…

Read More