News Editor Team

கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலி சப்ரி

கனடாவின் பிரம்டனில்  தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு  இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர்  இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை…

Read More

இலங்கை இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்.

இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை  வந்தடைந்தது. இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. வந்தடைந்த படகையும் பயணிகளையும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை  புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் வந்தடைந்தது. தொடர்ந்து…

Read More

ஊழல் மோசடியை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்

இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களை போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது வெற்றுப்…

Read More

கொழும்பின் பல பகுதிகளில் கனமழை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  மக்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதிகள். 100 மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும். கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன…

Read More

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான  பாலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் செய்த், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சபாநாயகர் கேட்டறிந்துகொண்டார். பாலஸ்தீனம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகருக்கு விளக்கிக் கூறினார். இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து இலங்கையர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்றமை…

Read More

சரியான நேரத்தில் நிலைப்பாட்டை அறிவிப்போம்

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழுது தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில் இன்று  ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். இந்த தடவை அது…

Read More

மஹா நாயக்க தேரரை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (16) மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய மக்குலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார். இத்தருணத்தில் தேசிய மக்கள்…

Read More

17 வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எரிவாயு சிலிண்டரும், எம் திலகராஜாவுக்கு சிறகு சின்னமும் மற்றும் பாக்கிய செல்வம் அரியநேந்திரனுக்கு சங்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

Read More

எவருக்கும் ஆதரவில்லை – மைத்திரிபால

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன்னை பற்றி ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் வெளியிட்டு வரும் விடயங்களை அவர் நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைபதவி தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனையவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் செல்லுபடியற்றவை என குறிப்பிட்டுள்ளார்.

Read More

அலி ஸாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More