Category: உள்நாடு
சஜித்திற்கு அதிகரிக்கும் ஆதரவு
இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதல் நபராக சஞ்சல குணவர்தனவை குறிப்பிடலாம். இவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன்…
அலி சாஹிர் எம் பியிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலி சாஹிர் மௌலானா எம். பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , கட்சியிலிருந்து இடைநிறுத்தி, அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே – வேலுகுமார் எம்.பி
“நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை” என வேலுகுமார் எம். பி. அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இம்முறை ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகவே போட்டியிடுகின்றார். ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு குழுவினர் சார்ந்தோ அல்லாமல் சுயாதீன வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை. எனவே…
மழையுடனான வானிலை இன்றும் தொடரும் – மண்சரிவு எச்சரிக்கை.
நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றல், சேற்று நீர் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற இலக்கம் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல்…
கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலி சப்ரி
கனடாவின் பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை…
இலங்கை இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்.
இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் நேற்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. வந்தடைந்த படகையும் பயணிகளையும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் வந்தடைந்தது. தொடர்ந்து…
ஊழல் மோசடியை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்
இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களை போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது வெற்றுப்…
கொழும்பின் பல பகுதிகளில் கனமழை
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மக்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதிகள். 100 மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும். கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன…
இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்
இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் செய்த், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சபாநாயகர் கேட்டறிந்துகொண்டார். பாலஸ்தீனம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகருக்கு விளக்கிக் கூறினார். இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து இலங்கையர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்றமை…
சரியான நேரத்தில் நிலைப்பாட்டை அறிவிப்போம்
சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழுது தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். இந்த தடவை அது…