Category: உள்நாடு
ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இன்று (15) காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகக் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. பின்னர் முற்பகல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், நேற்று (14) வரை கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், 17 சுயேச்சை…
ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட அமைச்சுப் பதவிகள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டமையால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டன….
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்தார் வேலு குமார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலுக்குமார் தனது முடிவை இன்று வியாழக்கிழமை (15) அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்காக…
ஹரின், மனுஷவின் அர்ப்பணிப்பே நாடு பங்களாதேஷின் நிலைக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் அர்ப்பணிப்பு காரணமாகவே நாடு பங்களாதேஷின் நிலைக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டம் காரணமாக அந்த நாடு…
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் – ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கேயே தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி, மொஹமட் யூனுஸிடம் கூறியுள்ளார். பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்….
இலஞ்சம் பெற்றதாக கட்சியின் செயலாளர் உட்பட 8 பேர் கைது.
எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் இலஞ்சம் கோரும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் பொதுப்பயன் பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடமிருந்து ரூ. 30 மில்லியன் (௹. 3 கோடி)தொகையை இலஞ்சமாக பெறும்போது கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . ஜனக ரத்நாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் லங்கா பொதுஜன கட்சி சார்பில் போட்டியிட நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில்…
மனுஷ நீக்கம் – பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில்
மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் கட்சி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என கடந்த 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய மக்கள்…
சஜித்துக்கு ஆதரவு வழங்க மக்கள் காங்கிரஸ் தீர்மானம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்குவதாக சற்றுமுன் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடகூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் இன்று மாலை(14) முதல் இடம்பெற்ற நீண்ட நேரம் நடைபெற்ற உயர்பீடக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த பின்னரே மேற்கண்டவாறு அறிவிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி உயர்பீட கூட்டத்தின் பின் , நாடாளாவிய ரீதியில் மாவட்ட செயற்குழுவை சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களின்…
அதாவுல்லாவும் ரணிலுக்கு ஆதரவு.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதேநேரம், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாரும் உரிமை கொண்டாட முடியாது – அமைச்சர் ஜீவன் தொண்டமான்.
சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள நிர்ணய சபையுடாக 1,700 சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம், இதற்கு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிங்கு நன்றியை தெரிவிக்கொள்கிறேன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பள…