கொரோனா தொற்றினால் 84 இலட்சம் பேர் பாதிப்பு

(UTV | கொவிட் -19) – உலகம் முழுவதும் கொவிட் -19 எனும் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரையில் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 265 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் பரவிய குறித்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருவதோடு, இந்த வைரசுக்கு இதுவரையில் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரையில்: [இலங்கை நேரப்படி காலை 09:18]

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை : 8,400,274
வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை : 451,265
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 4,415,007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *